இந்தியாவுக்கான பயணத்தடையை 3 ஆம் நிலையாக குறைத்தது அமெரிக்கா
இந்தியா மீதான பயணத்தடை விதிகளில் அமெரிக்கா மாற்றம் செய்துள்ளது. இதுவரை உச்சபட்சமான 4 ஆம் நிலை பயணத் தடை விதிக்கப்பட்டு, அமெரிக்கர்கள் யாரும் இந்தியாவுக்கு பயணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது.
அது இப்போது 3 ஆம் நிலை பயணத்தடையாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு செல்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதாகும். இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது என்பதை அங்கீகரிக்கும் வகையில் இந்த மாற்றத்தை அமெரிக்க செய்துள்ளதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டு சென்றால் கொரோனா தொற்றும் அதனால் ஏற்படும் தீவிர விளைவுகளும் குறைவாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்ற பயணக் கட்டுப்பாட்டு தளர்வை பாகிஸ்தான் பயணத்திற்கும் அமெரிக்க வழங்கி உள்ளது.
Comments