இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்தவர்கள் நேரடியாக சவூதி அரேபியா வர தடை

0 3331
இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்தவர்கள் நேரடியாக சவூதி அரேபியா வர தடை

இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் நேரடியாக சவூதி அரேபியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 ஆவதாக, ஒரு நாட்டில், இரண்டு வாரங்கள் தங்கிய பின்னர் ,அந்த நாட்டின் வழியாக வர மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அப்படி சவூதி அரேபியாவுக்கு வருபவர்களும், தடை விதிக்கப்பட்டுள்ள 9 நாடுகளில் 14 நாட்களுக்குள் பயணம் செய்திருக்க கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து நேரடியாக சவூதி அரேபியா வரை தடை விதிக்கப்பட்டது.

அதன்பின்னர், கடந்த மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா, யுஏஇ உள்ளிட்ட 11 நாடுகள் மீதான பயணத் தடை நீக்கப்பட்டது. தடை நீக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் தடுப்பூசி போடாதவர்களாக இருந்தால், சவூதி வந்தவுடன் 7 நாட்கள் ஹோட்டல்களில் குவாரன்டைனில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments