கிழக்கு லடாக் எல்லையை ஒட்டி, சாக்ச்சே பகுதியில் சீனாவின் புதிய விமானப்படை தளம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக தகவல்
கிழக்கு லடாக் எல்லைப் பதற்றம் நீடிக்கும் நிலையில், அசல் கட்டுப்பாட்டு எல்லையை ஒட்டி, சாக்ஷே (Shakche) என்ற இடத்தில், சீனா விமானப் படைத்தளம் அமைப்பது தெரியவந்துள்ளது. இந்த படைத்தளம் வேகமாக அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கால்வனில் இருதரப்பு படையினருக்கு இடையே மோதல் ஏற்படுவதற்கு முன்னரே இதற்கான கட்டுமானப்பணிகள் துவங்கியதாக சொல்லப்படுகிறது. பதற்றம் நிலவும் எல்லையில், சீனாவை முந்தி இந்திய போர் விமானங்கள் அதி விரைவில் வந்துவிடும் என்பதை உணர்ந்த பின்னரே இந்த விமானப்படை தளத்தை சீனா உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர ஏற்கனவே எல்லைக்கு அப்பால் ஷின்ஜியாங் மற்றும் ஆக்கிரமிப்பு திபெத்தில் இருக்கும் சீனாவின் 7 விமானப்படை தளங்களை இந்தியா செயற்கைக் கோள் உதவியுடன் கண்காணித்து வருகிறது.
Comments