அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் - அதிமுக
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டு கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுசூதனனுக்கு, வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு மூன்றாவது நாளாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அவரது உடல் நிலை குறித்து காலை முதல் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. இதனை மறுத்தள்ள அதிமுக, மதுசூதனன் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
Comments