ஆபாச வீடியோ தயாரித்த வழக்கில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா கைது

0 5061
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா கைது

ஆபாச வீடியோ தயாரித்தது தொடர்பான வழக்கில், சதித்திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் என்ற அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதாக மும்பை காவல் ஆணையர் ஹேமந்த் நாக்ரலே தெரிவித்துள்ளார்.

ஆபாச படங்களை தயாரித்து அவற்றை சில செயலிகள் வாயிலாக வெளியிட்டது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்ததாகவும், அது தொடர்பான விசாரணையில் ஆபாச படங்களை தயாரிப்பதில் ராஜ் குந்த்ரா முக்கிய குற்றவாளி என்பதற்கு தங்களிடம் ஆதாரங்கள் உள்ளதால், அவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

இந்த வழக்கில், சினிமா மற்றும் சீரியல் வாய்ப்பு தருதாக கூறி நடிகைகளை ஆபாசமாக படம் பிடித்து, அவற்றை கட்டண செயலிகளில் வெளியிட்டதாக கடந்த வாரம் 11 பேர் மீது மும்பை போலீசார் FIR பதிவு செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments