தமிழகத்தில் 44 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

0 3430
தமிழகத்தில் 44 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

தமிழகத்தில் ஏறத்தாழ 44 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 43 ஆயிரத்து 796 கர்ப்பிணி பெண்களுக்கு முதல் தவனையும், 59 பேருக்கு இரண்டு தவனையும் என 43 ஆயிரத்து 855 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களிலும், குறைந்தபட்சமாக செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments