அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் இன்று விண்வெளிப் பயணம்

0 3079
அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் இன்று விண்வெளிப் பயணம்

மெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து இன்று விண்வெளி சுற்றுலா செல்ல உள்ள அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெப் பெசோஸ்,(Jeff Bezos) தன்னோடு வருபவர்கள் ரிலாக்சாக அமர்ந்து ஜன்னல் வழியாக விண்வெளி அழகை ரசிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகப் பணக்காரர்களுள் ஒருவரான ஜெப் பெசோஸ் (Jeff Bezos) குறைந்த கட்டணத்தில் விண்வெளி சுற்றுலாவை சாத்தியப்படுத்தும் முயற்சியாக புளூ ஆர்ஜின் (Blue Origin) நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கடந்த 11ம் தேதி, பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன் விண்ணில் 90 கிலோமீட்டர் பயணித்த நிலையில், ஜெப் பெசோஸ் தன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட New Shepherd விண்கலத்தில் இன்று 100 கிலோமீட்டர் தூரம் விண்வெளி பயணம் மேற்கொள்கிறார்.

விமானிகள் தயவின்றி தானியங்கி முறையில் இயங்கும் 60 அடி நீல விண்கலத்தில் ஜெப் பெசோஸுடன் (Jeff Bezos) அவரது சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயது முன்னாள் பெண் விமானி  வாலி பங்க் (Wally Funk) மற்றும் ஆலிவர் டேமென் (Oliver Daemen) என்ற 18 வயது சிறுவன் ஆகியோர் பயணிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments