மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவில் 4300 கிலோ போதைப் பொருள் பறிமுதல்
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான Costa Rica வில் படகு மூலம் கடத்தி வரப்பட்ட 4ஆயிரத்து 300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொலம்பியாவின் Turbo துறைமுகத்தில் இருந்து Costa Rican வின் Moin துறைமுகத்திற்கு வர்த்தகப் படகு ஒன்று சென்றது.
அந்த படகை கோஸ்டா ரிக்கா பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் கோகைன் மற்றும் கஞ்சா ஆகியவை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டின் வரலாற்றில் அதிக அளவில் போதைப் பொருள் சிக்கியிருப்பது இது இரண்டாவது முறையாகும்.
Comments