75 லட்சம் மடர்னா தடுப்பூசிகளை வாங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்

0 2053
75 லட்சம் மடர்னா தடுப்பூசிகளை வாங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்

75 லட்சம் மடர்னா தடுப்பூசிகள் வாங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மடர்னாவின் கொரோனா தடுப்பூசிக்கு கடந்த மாதம் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரால் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. உலகளாவிய தடுப்பூசி பகிர்வுத் திட்டத்தின் கீழ் மடர்னா தடுப்பூசியை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஆனால் இழப்பீட்டு விதிமுறை குறித்து மடர்னா நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இந்த தடுப்பூசி எப்போது வரும் என திட்டமிடப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதால் இந்தியாவில் மடர்னா தடுப்பூசி கிடைப்பது தாமதமாகி வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments