பண்ணை வீட்டில் பிரைவேட் பார்ட்டி : சிக்கிய சினிமா துணை நடிகை...

0 8844
பண்ணை வீட்டில் பிரைவேட் பார்ட்டி : சிக்கிய சினிமா துணை நடிகை…

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் மது, மாதுக்களை கொண்டு பார்ட்டிக்களை நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர். 

1994 ஆம் ஆண்டு வெளிவந்த காதலன் படத்தில் போலீஸ் அதிகாரியாக வலம் வந்தவர் துணை நடிகை கவிதா ஸ்ரீ.சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள எல்.ஆர்.பார்ம் என்ற தனியார் சொகுசு விடுதியை சினிமா சூட்டிங்கிற்கு என 2 மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்த துணை நடிகை கவிதா ஸ்ரீ அதில் பிரைவேட் பார்ட்டி நடத்தி கல்லா கட்டி உள்ளார்.

சினிமா பாணியில் மது விருந்தின் நடுவே துள்ளல் இசையில் மாதுக்களை வலம் வரச் செய்தும், அவர்கள் மீது விருந்தினர் பணத்தை அள்ளி வீச வேண்டும் என்றும், அதிக தொகைக்கு யார் பெண்ணை ஏலம் எடுக்கிறாரோ அவர் அந்த பெண்ணுடன் பார்ட்டியில் ஈடுபடலாம் என விதிமுறைகளை வைத்துள்ளார்.

மேலும் கவிதா ஸ்ரீ-யின் பிரைவேட் பார்ட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அவரது கூகுள் பே அக்கவுண்ட்டிற்கு 1,599 ரூபாயை நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் பெண்களுக்கு எண்ட்ரி ப்ரி என்றும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து பண்ணை வீட்டை சுற்றி வளைத்த போலீசார் பார்டியில் ஈடுபட்ட துணை நடிகை கவிதா ஸ்ரீ, 11 பெண்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட 15 ஆண்களை மடக்கிப் பிடித்தனர்.

மேலும் பண்ணை வீட்டிற்கு சீல் வைத்த போலீசார் கொரோனா ஊரடங்கில் பிரைவேட்டாக பார்ட்டி நடத்திய துணை நடிகை கவிதா ஸ்ரீ உள்பட பிடிபட்ட 15 ஆண்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments