ரூ.17,297 கோடியில் 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் 17 ஆயிரத்து 297 கோடி ரூபாய் மதிப்பிலான 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் 17 ஆயிரத்து 297 கோடி ரூபாய் மதிப்பிலான 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாக உள்ளது. ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Capital land, Adhani, JSW, ZF-WABCO உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்ள உள்ளது. அத்துடன் 14 திட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கர்னி உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
Comments