மதுரையில் அணில் குட்டிகளுக்காக பைக்கை விட்டுக்கொடுத்த கால்நடை மருத்துவர்
மதுரையில், அடைக்கலம் புகுந்த அணிலுக்காகவும், அதன் குட்டிகளுக்காகவும் தனது இரு சக்கர வாகனத்தை விட்டுக்கொடுத்த மனிதநேயமிக்க கால்நடை மருத்துவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
மதுரை ஆனையூர் கூடல் நகர் பகுதியை சேர்ந்த மெரில்ராஜ், வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை அணில் ஒன்று சுற்றி சுற்றி வருவதைக் கவனித்துள்ளார். வாகனத்தின் சீட்டு பகுதியில் அணில் சத்தம் கேட்டு சீட்டைத் திறந்து பார்த்தபோது உள்ளே மூன்று அணில் குட்டிகள் இருந்துள்ளன.
சீட்டின் அடிப்பகுதியில் இருந்து கீழே விழுந்த அணில் குட்டியை தாய் அணிலானது வாயில் கவ்விக் கொண்டு சென்று மீண்டும் பாதுகாப்பாக சீட்டு பகுதியில் பாதுகாப்பாக கொண்டுவந்து வைத்ததையும் படம்பிடித்துள்ளார்.அப்படியே அணில் குட்டிகள் வளரும் வரை ஒரு மாதம் இரு சக்கர வாகனத்தை எடுக்காமல் இருந்துள்ளார் மெரில்ராஜ்.
ஆறறிவு படைத்த மனிதர்களில் சிலர், குழந்தை பெற்ற சில மணிநேரங்களில் தூக்கி வீசி விட்டு செல்லும் இந்த காலத்தில், விலங்குகள் குட்டியை பாதுகாப்பதும், அதற்காக ஒரு மனிதர் பரிவு காட்டியதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
Comments