அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யா
அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்துள்ளது. சிர்கான் ( Tsirkon )என்ற பெயர் கொண்ட இந்த ஏவுகணை, 350 கிலோ மீட்டர் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டது என ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
வெண்கடல் பரப்பில் கப்பல் ஒன்றில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை குறிவைத்து சிர்கான் ஏவுகணை சோதனை நடைபெற்றது. ரஷ்யாவின் புதிய தலைமுறை ஆயுதங்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் முக்கியப் பங்காற்றும் என ரஷ்ய அதிபர் விளாமிடிர் புத்தின் கடந்த 2018ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments