கடன் வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் பணமோசடி டெல்லியைச் சேர்ந்த 4 பேரை சென்னைக் காவல்துறையினர் கைது
கடன் வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் வங்கிக் கணக்கில் பணத்தைப் பெற்று ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த 4 பேரைச் சென்னைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் ஆன்லைன் மோசடிப் புகார்களைப் புலனாய்வு செய்ததில் மோசடிக்காரர்கள் டெல்லியில் இருந்து செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்துக் காவல் தனிப்படையினர் டெல்லியில் 10 நாளாக முகாமிட்டுத் தீவிரப் புலன் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, டெல்லி ஜனக்புரியில் போலி கால் சென்டர் நடத்தி வந்த அசோக்குமார், அவர் மனைவி காமாட்சி, அவர்களுக்கு உடந்தையாக இருந்த ராஜ்வேல், அபிசேக் பால் ஆகியோரைக் கைது செய்து 8 லட்ச ரூபாய் பணம் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இந்தக் கும்பல் பஜாஜ் பைனான்ஸ், வரலட்சுமி பைனான்ஸ், தமிழர் பைனான்ஸ் போன்ற வெவ்வேறு பெயர்களில் போலியாக தொடர்புகொண்டு கடன்வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
Comments