30 நாட்களுக்குள் 75 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டால் இறப்பு எண்ணிக்கையை 37 சதவிகிதம் வரை குறைக்கலாம் - ஐசிஎம்ஆர்

0 4532
30 நாட்களுக்குள் 75 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டால் இறப்பு எண்ணிக்கையை 37 சதவிகிதம் வரை குறைக்கலாம் - ஐசிஎம்ஆர்

கொரோனா 3 ஆவது அலை குறித்த அச்சம் நீடிக்கும் நிலையில், 30 நாட்களுக்குள் 75 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டால்  இறப்பு எண்ணிக்கையை 37 சதவிகிதம் வரை குறைக்கலாம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆரின் இந்த ஆய்வு குறித்த அறிக்கையை மருத்துவ இதழான தி லான்செட் பிரசுரித்துள்ளது.

உள்ளூர் நோய் பரவலின் அடிப்படையில், ரேபிட் ரெஸ்பான்ஸ் வேக்சினேஷன் என்ற அதிவிரைவு தடுப்பூசி  திட்டத்தை அமல்படுத்தி, குறைந்தது நபருக்கு ஒரு டோஸ் மட்டும் போட்டால் கூட,  ஒரு மாதத்தில் 75 சதவீதம் என்கிற இலக்கை எட்டலாம் எனவும் ஐசிஎம்ஆரின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments