சென்னை மற்றும் கோவை லீ மெரிடியன் ஹோட்டல்களை வாங்கியது எம்ஜிஎம்
சென்னை மற்றும் கோவையில் உள்ள லி மெரிடியன் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை, எம்.கே.ராஜகோபாலன் தலைமையிலான எம்ஜிஎம் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிட்டெட் 423 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள லி மெரிடியனை மருத்துவமனையாக மாற்றவும், கோவை லி மெரிடியனை தொடர்ந்து ஹோட்டலாக நடத்தவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தொழிலதிபர் பழனி பெரியசாமியின் அப்பு ஹோட்டல்ஸ் பிரைவேட் நிறுவனம் இந்த ஹோட்டல்களை நடத்தி வந்தது. அதன் மீது, கடன் பாக்கிக்காக இந்திய சுற்றுலா வளர்ச்சி நிதிக் கழகம், கம்பெனி திவால் சட்ட விதிகளின் படி கடந்த 2016 ல், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாய சென்னை கிளையில் வழக்கு தொடர்ந்தது.
அதன் முடிவில், ஹோட்டல்களை வாங்க முன்வந்த நிறுவனங்களில், 1600 கோடி மதிப்புள்ளதாக கூறப்படும் இந்த ஹோட்டல்களை, 423 கோடி ரூபாய்க்கு விற்க ஒப்புதல் கிடைத்த நிலையில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் கையகப்படுத்தி உள்ளது.
Comments