நடிகர் விஜய் வழக்கு - வேறு அமர்வுக்கு மாற்றம்
ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை, வரி தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த மனுவில், தனி நீதிபதி விதித்த 1 லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.
மேலும் தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல், இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட கோரியும் விஜய் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுக்களை வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மேல் முறையீட்டு அமர்விற்கு மாற்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
எனவே, நீதிபதிகள் துரைசாமி மற்றும் ஹேமலதா அமர்வில் நடிகர் விஜய் மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments