"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான தங்க கத்தி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தங்க கத்தியை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
தொழிலதிபர் எம்.எஸ்.பிரசாத் என்பவர் கோவையை சேர்ந்த தங்க வடிவமைப்பு நிபுணர்களைக் கொண்டு ஆறு மாதமாக 6.5 கிலோ எடையுள்ள தங்கத்தால், கத்தியை (சூரிய கடாரி) தயார் செய்துள்ளார்.
இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர், தங்க கத்தியை தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Comments