கடல் முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து விபத்து - மீனவர் பலி
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டிணம் மீன் பிடி துறைமுக முகத்துவாரத்தில் மீனவர் ஒருவர் உயிரிழக்க காரணமான படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகியுள்ளது.
நேற்று முன் தினம் குளச்சல் துறைமுகத்தில் இருந்து 7 மீனவர்கள் பைபர் படகில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியபோது, கடல் சீற்றமாக இருந்தது.
அப்போது எழுந்த பெரிய அலை ஒன்று படகின் போக்கை மாற்றி நிலை தடுமாறி கவிழ வைத்தது.
படகுக்கு அடியில் சிக்கி ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயங்களுடன் நீந்தி கரை திரும்பினர். முகத்துவார பகுதியில் மணல் திட்டுகள் அதிகம் உள்ளதால் படகுகள் கரை திரும்பும் போது பெரிய அலையில் சிக்கி கவிழ்வதாக அங்குள்ள மீனவர்கள் கூறியுள்ளனர்.
எனவே அந்த பகுதியில் மணல் திட்டுகளை அகற்றி ஆழப்படுத்தவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Comments