ஸ்பார்கஸ்சன் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி

0 3384

ஜெர்மனியில் நடந்த Sparkassen கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.

Dortmund நகரில் நடந்த No-Castling செஸ் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்ய வீரர் விளாடிமர் கிராம்னிக்கை (Vladimir Kramnik) எதிர்கொண்டார்.

கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஆன்ந்த், சாதுர்ய காய் நகர்த்தலின் மூலம் ரஷ்ய வீரரை திணறடித்தார். விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தின் 40-வது நகர்வில் போட்டி டிராவில் முடிந்தது. விஸ்வநாதன் ஆனந்த் 2 புள்ளி 5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் 4 போட்டி தொடரில் ஏற்கனவே ஆனந்த் 2-க்கு 1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று இருந்த நிலையில் Sparkassen கோப்பை கைப்பற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY