ஹஜ் புனிதப் பயணம் தொடக்கம்.. 5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 60,000 பேர் மட்டுமே தேர்வு..!
கொரோனா பரவலுக்கு நடுவே குறைந்த அளவிலான யாத்ரீகர்களுடன் புனித ஹஜ் கடமை தொடங்கியுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில் உள்ள ஹஜ்ஜூக்குச் செல்ல நடப்பாண்டு 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 60 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.
மற்ற நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் சவுதியில் குடியிருப்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 6 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களும் சிறு சிறு குழுக்களாகவும், சமூக இடைவெளியுடன் காபாவை சுற்றி வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Comments