குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். தனிவிமானத்தில் அவருடன் அவரது மனைவி துர்கா, எம்பி கனிமொழி ஆகியோரும் சென்றனர்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டிருந்தாலும், கொரோனா பரவலால் அது நடக்கவில்லை. இந்த நிலையில், குடியரசுத் தலைவரை நாளை சந்திக்க முதலமைச்சருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, எழுவர் விடுதலை, நீட் தேர்வு, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஸ்டாலின் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்பட உள்ளதாகவும், அதற்கு வருமாறு குடியரசு தலைவரிடம் ஸ்டாலின் அழைப்பு விடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
Comments