சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கும் சோனியாவின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன் ; முதலமைச்சர் அமரீந்தர் சிங்
பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்கும் சோனியா காந்தியின் முடிவை ஏற்றுக் கொள்வதாக, முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு முன் சித்துவின் நியமனம் தொடர்பாக நடந்த அரசியல் நடவடிக்கைளுக்காக தமது கோபத்தை வெளிப்படுத்தி உள்ள அவர், தம்மை குறித்து அவதூறாக பதிவிட்ட 150 டுவிட்டர்களுக்காக சித்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.
அது வரை சித்துவை சந்திக்க மாட்டேன் எனவும் அவர் கூறியிருக்கிறார். துணை முதலமைச்சரை நியமிக்கவும், அமைச்சரவையை விருப்பம் போல மாற்றிக் கொள்ளவும், சித்துவின் கீழ் கட்சிக்கு செயல் தலைவரை நியமிக்கவும் அமரீந்தர் சிங்கிற்கு சோனியா காந்தி சுதந்திரம் வழங்கியதை தொடர்ந்தே அவர் சித்துவின் நியமனத்தை ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சித்து காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரை சந்தித்து தமக்கு ஆதரவு திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
Comments