நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய வசதி இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு
நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய வசதி இல்லாத அரசுப் பள்ளி மாணவர்கள், அவரவர் பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 16ஆம் தேதி தொடங்கி நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுகள் நடைபெற்று வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் இணைய வசதி இல்லாததால் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. ஒரு சில இடங்களில் விண்ணப்பிக்கும்போது சில தவறுகளும் நேர்வதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு அந்தந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை ஒன்றிணைத்து, பிழையின்றி அவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றி ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள்ளாக பணிகளை முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Comments