உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலையடுத்து இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ரத்து
உத்தரப்பிரதேசத்தில் கன்வர் யாத்திரை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் கன்வர் யாத்திரையை நடத்துவதைத் தவிர்க்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், கூடுதல் தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் கன்வர் சங் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து கன்வர் யாத்திரையை கைவிடுவதாக இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கன்வர் யாத்திரை என்பது சிவ பக்தர்கள் பாத யாத்திரையாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரிதுவாருக்கு சென்று, புனித கங்கை நீரை, சிவன் கோவிலில் அபிஷேகம் செய்வதற்காக கொண்டு வருவதாகும். இம்மாதம் 25ம் தேதி கன்வர் யாத்திரை தொடங்க இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உத்தரகாண்ட் அரசும் ரத்து செய்வதாக அறிவித்திருந்தது.
Comments