காவிரியில் கரைபுரளும் வெள்ளம் - ஒகேனக்கலில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்

0 5935
காவிரியில் கரைபுரளும் வெள்ளம் - ஒகேனக்கலில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்

கர்நாடக அணைகளில் இருந்து 17 ஆயிரம் கன அடியாக காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர், ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரத்து 128 கன அடியாகவும் கபினி அணைக்கான நீர்வரத்து நீர்வரத்து 17ஆயிரத்து 859 கன அடியாகவும் உள்ளது.

இரு அணைகளில் இருந்தும் காவிரியில் 17 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. கடந்த 15ஆம் தேதி 6 ஆயிரம் கன அடியாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்த தண்ணீர், படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நாளை காலைக்குள் முழு தண்ணீரும் பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் காவிரியாற்றில் வரும் தண்ணீரின் அளவை அளவீடு செய்து தொடந்து கண்காணித்து வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments