அமெரிக்காவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ ; 2.41 லட்சம் ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்

0 3429
அமெரிக்காவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ ; 2.41 லட்சம் ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்

அமெரிக்காவின் ஆரிகன் மாகாணத்தில் ஒரு வாரத்துக்கு மேலாக காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது.இதனால் ஃப்ரெமாண்ட் வைன்மா (Fremont-Winema) வனப்பகுதியில் 2 லட்சத்து 41,000 ஏக்கர் காடுகள் கருகி சாம்பலாகின. 1900 தீயணைப்பு வீரர்களும், ஏராளமான ஹெலிகாப்டர்களும் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இருந்தபோதும், பலத்த காற்று வீசி தீ வேகமாகப் பரவுவதால், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 4 நாட்களாக பின்வாங்கி வருகின்றனர். இதே வேகத்தில் தீ பரவினால் அடுத்த சில நாட்களில் 5000 வீடுகள் வரை தீக்கிரையாகும் எனக் கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments