எல்லைகளுக்கும் இறையாண்மைக்கும் எதிராக யாரும் சவால் விட முடியாது - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

0 6803

நாட்டிற்கு தனி பாதுகாப்பு கொள்கையை தந்தவர் பிரதமர் மோடி என கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவின் எல்லைகளுக்கும் இறையாண்மைக்கும் எதிராக யாரும் சவால் விட முடியாது என தெரிவித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்பு படை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 2014ஆம் ஆண்டில் மோடி பதவியேற்பதற்கு முன்னர், பாதுகாப்புக்கென தனிக் கொள்கை இல்லை என்றார்.

வெளியுறவுக்கொள்கையோடு சேர்ந்ததாக பாதுகாப்புக் கொள்கை இருந்ததாகவும், அதை மாற்றி மோடி தனிப் பாதுகாப்பு கொள்கையை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்களை முறியடிக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக் நுட்பங்களை தயார் செய்ய வேண்டும் எனக் கூறிய அமித்ஷா, எல்லைக்கு அப்பால் இருந்து தாக்குதல்களுக்கு ட்ரோன்களை பயன்படுதப்படும் விவகாரத்தையும் தாண்டி இது முக்கியமானது என்றார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments