மத்திய அரசு புதிதாக ஆர்டர் கொடுத்துள்ள 66 கோடி டோஸ் தடுப்பூசிகளின் விலை உயர்வு
மத்திய அரசு புதிதாக ஆர்டர் கொடுத்துள்ள தடுப்பூசிகளை, கோவிஷீல்டு டோஸ் 215 ரூபாய், கோவேக்சின் டோஸ் 225 ரூபாய் என்ற உயர்த்தப்பட்ட விலையில் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீரம் இன்ஸ்டியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 66 கோடி டோஸ்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், சுமார் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டோஸ்கள் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தடுப்பு மருந்துகளை டோஸ் 150 ரூபாய் என்ற விலையில் வாங்கும் நிலையில், புதிய ஆர்டர்களுக்கு வரி உட்பட கோவிஷீல்டுக்கு 215 ரூபாயும், கோவேக்சினுக்கு 225 ரூபாயும் மத்திய அரசு வழங்குதாக கூறப்படுகிறது. தடுப்பூசி கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என தடுப்பூசி நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
Comments