பங்குகள் வெளியீடு மூலம் ரூ.16,600 கோடி நிதி திரட்ட பேடிஎம் நிறுவனம் முடிவு
புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம் 16 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குகள் விற்பனை மூலம் இந்தத் தொகையைத் திரட்ட பேடிஎம் நிறுவனத்தின் தலைமை குழு அனுமதி வழங்கி உள்ளது. 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பங்குகளை வெளியிட செபியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளதாகவும், ஏற்கனவே முதலீட்டாளர்களிடம் இருக்கும் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று நிதி திரட்ட முடிவு செய்து உள்ளதாகவும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான வரைவு அறிக்கை செபியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய பங்கு சந்தையில் கோல் இந்தியா, ரிலைன்ஸ் பவர் நிறுவனங்களுக்கு பின் பங்கு விற்பனை மூலம் அதிக நிதி திரட்டிய 3-வது நிறுவனமாக பேடிஎம் மாறும் என தகவல் வெளியாகி உள்ளது.
Comments