எல்லா வைரசுகளையும் அழிக்கும் தடுப்பூசி ? Mynvax பயோடெக் மற்றும் IISc சேர்ந்து கண்டுபிடித்துள்ளது
தற்போது பரவும் அனைத்து வகையான மரபணு மாற்ற வைரசுகளையும் அழிக்க கூடிய தடுப்பூசியின் மூலக்கூறுகளை மைன்வாக்ஸ் பயோடெக் நிறுவனமும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயன்சும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளன. இதை, ஆஸ்திரேலியாவின் CSIRO அமைப்பு ஆய்வு செய்து அதன் திறனை உறுதிப்படுத்தி உள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியை விலங்குகளிடம் செலுத்தி சோதனை செய்தது இந்த CSIRO அமைப்பாகும். இனி,கிளினிகல் மற்றும் மனிதர்களிடம் சோதிக்கப்பட்ட பின்னர் இந்த மூலக்கூறுகளை வைத்து தடுப்பூசி உற்பத்தி துவக்கப்பட வாய்ப்புள்ளது.
எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரசுக்கு எதிராக உறுதியான நோய் எதிர்ப்பு சக்தியை இந்த தடுப்பூசி மூலக்கூறுகள் ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு மாதம் வரை 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், 90 நிமிடங்கள் வரை 100 டிகிரியிலும் இந்த தடுப்பூசியை வைத்து பயன்படுத்தலாம் என்பதால் இந்தியாவில் மிகவும் உபயோகமாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
Comments