காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் இல்லாமல், மேகதாது அணைக்குஅனுமதி வழங்கப்படாது -தமிழக அனைத்துக்கட்சி குழுவினரிடம் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உறுதி

0 2567

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல், மேகதாது அணை உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என தமிழக அனைத்துக்கட்சி குழுவினரிடம் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதி அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவினர், டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினர். சுமார் 45 நிமிடத்திற்கு மேல் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தமிழக எல்லையை ஒட்டியுள்ள மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்ட அனுமதியளிக்க கூடாது என்று வலியுறுத்தினர்.

இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்களை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என மத்திய அமைச்சர் தெரிவித்ததாக கூறினார். எனினும், மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இதற்கிடையே, மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கவுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments