”தமிழகத்தில் ஒருவருக்கு கூட ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை” -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் ஒருவருக்கு கூட ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அசோக் நகர் தனியார் பள்ளியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையம் அமைக்க வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்து கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
Comments