கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 11000 கன அடி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 3035

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழத்துக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கேரளாவின் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் கபினி அணைக்கான நீர் வரத்து 19 ஆயிரத்து 632 கன அடியாக உள்ளது.

தமிழகத்துக்கு அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரத்து 552 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு 19 ஆயிரத்து 696 கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 2 ஆயிரத்து 421 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

84 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியுள்ள நிலையில், அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments