ஆப்கானிஸ்தான் அதிபருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

0 2291

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனியை சந்தித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், தாலிபனுடன் மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

உஸ்பெகிஸ்தான்-மத்திய ஆசிய நாடுகளின் மாநாட்டுக்கு இடையே, ஆப்கான் தலைவர்களுடன் அவர் பேசிய போது அந்நாட்டில் அமைதிக்கான இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதி செய்தார்.

பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணைத் தலைவர் உள்ளிட்டோருடனும் ஆப்கான் பிரச்சினையைப் பற்றி ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments