பருவநிலை மாற்றத்தை தடுக்க, அமெரிக்காவுடன் இணைந்து போராட தயார் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் பருவநிலை மாற்றத்தை தடுக்க, அமெரிக்காவுடன் இணைந்து போராட தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளதன் மூலம் இந்த விவகாரத்தில் அவரது நிலைப்பாடு மாறியுள்ளது தெரியவந்துள்ளது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், கடந்த ஜூன் மாதம் 142ஆண்டுகளில் இல்லாத அளவாக 34.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
எதிர்வரும் நாட்களிலும் மாஸ்கோவில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அமெரிக்க காலநிலை தூதர் ஜான் கெர்ரியுடன் தொலைபேசியில் பேசிய புதின், புவி வெப்பமடைததால் உருவாகும் காலநிலை பிரச்சனை தொடர்பாக அமெரிக்காவும், ரஷ்யாவும் பொதுவான அணுகுமுறைகளையே கொண்டுள்ளதாகவும், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின் குறிக்கோள்களை அடைய ரஷ்யா உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments