கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசு அறிவிப்பு
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் ஆண்டுதோறும் சேர்க்கப்படுவர். இதில் எல்.கே.ஜி அல்லது 1-ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை பயில்வதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும்.
அதன்படி, எல்கேஜி, யுகேஜி, முதல் வகுப்பிற்கு 12,458 ரூபாய், இரண்டாம் வகுப்பிற்கு 12,449 ரூபாய் என வகுப்பு வாரியாக கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டை விட 18 ரூபாய் வரை மட்டுமே கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Comments