அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் 10ஆவது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ - நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் 10ஆவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயால் 2 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகின.
காற்றின் வேகத்தால் காட்டுத்தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதுவரை 21 வீடுகள் மற்றும் 54 கட்டிடங்கள் தீக்கிரையாகி உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
Comments