மருத்துவ காரணங்களுக்காக மெகுல் சோக்சிக்கு டொமினிகா உயர் நீதிமன்றம் ஜாமின்
டொமினிகாவில் கைது செய்யப்பட்டிருந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி மருத்துவ சிகிச்சைக்காக ஆண்டிகுவா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் இந்திய அரசால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சோக்சி, தப்பிச் சென்று ஆன்டிகுவா&பார்புடா தீவுகளில் குடியுரிமை பெற்று வசித்து வந்த நிலையில் அங்கிருந்து மாயமான அவர் கடந்த மே மாதம் 23 ஆம் தேதி அருகில் உள்ள டொமினிகாவில் கண்டுபிடிக்கப்பட்டடு, சட்ட விரோத குடியேற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
தான் கடத்தப்பட்டதாகவும் தன்னை மருத்துவ சிகிச்சை பெற மறுபடியும் ஆண்டிகுவா அனுப்ப வேண்டும் என்று சோக்சி தாக்கல் செய்த மனுவை விசாரித்த டொமினிகா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
Comments