லெபனான் நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அனாதைகளாக தெருவில் கைவிடப்படும் செல்லப்பிராணிகள்

0 3445
லெபனான் நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அனாதைகளாக தெருவில் கைவிடப்படும் செல்லப்பிராணிகள்

லெபனான் நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பூனைகளை வளர்க்க முடியாமல் மக்கள் தெருவில் விட்டு வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளில் லெபனான் நாட்டு பணம் அதன் மதிப்பை 90 சதவீதம் இழந்துள்ளதால், பெரும்பாலான மக்கள் அங்கு வறுமையில் வாடி வருகின்றனர். தங்களின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாகியுள்ளதால், பலரும் ஆசையாய் வளர்த்த பூனைகளை தெருவில் கைவிட்டு வருகின்றனர்.

இதனால் பல இடங்களில் தெருவோர பூனைகள் நடமாட்டத்தை காண முடிகிறது. இதனிடையே Beirut தெருக்களில் கைவிடப்படும் பூனைகளுக்கு Sara Jawad என்ற பெண்மணி ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்.

22 பூனைகளை மீட்டு வளர்த்து வருவதாக கூறும் அவர், அவற்றை வளர்க்க நன்கொடை நிதியையே பெரிதும் நம்பியிருப்பதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments