இந்திய மகளிர் அணிக்கு எதிரான 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

0 4528

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவியது.

Chelmsford மைதானத்தில் நடந்த 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 70 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 18 புள்ளி 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை Danni Wyatt 89 ரன்கள் குவித்தார். 3 போட்டி கொண்ட டி20 தொடரையும் இங்கிலாந்து அணி 2-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments