ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு

0 2895

லடாக் பிரச்னையில் அடுத்த கட்டமாக ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

தஜகிஸ்தானில் உள்ள தூஷன்பே நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியை, சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின் போது, எல்லைக் கோட்டருகே நடந்த பிரச்னையை ஒருதலைபட்சமாக மாற்ற முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல என ஜெய்சங்கர் தெரிவித்தார்.

தொடர்ந்து நடப்பாண்டின் தொடக்கத்தில் பாங்கோங் ஏரி பகுதியில் படைவிலக்கம் செய்யப்பட்ட நிகழ்வு மீதமுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நிலைமையை உருவாக்கி உள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அதேபோல் தற்போதுள்ள நிலைமையைத் தீர்ப்பதற்கும் சீனா தங்களுடன் இணைந்து செயல்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி யிடம் அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார். இதனைத் தொடர்ந்து லடாக் பகுதியில் முழுமையான அமைதி ஏற்படுத்துவது குறித்தும், அமைதியை மீட்டெடுப்பது குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் லடாக்கில் மீதமுள்ள பிரச்னைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க மூத்த ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments