மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி தடை

0 5678
மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இதன்மூலம் புதிய  வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் மாஸ்டர் கார்டுகளை இனி வழங்க முடியாது. ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவை ஜூலை 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதேசமயம், ஏற்கனவே மாஸ்டர் கார்டு பயன்படுத்துவோருக்கு புதிய தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் தரவை சேமிப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு அதிகமான அவகாசம் மற்றும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதிலும், பணம் செலுத்தும் முறை தொடர்பான தரவுகளை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments