புதுச்சேரியில் அனைத்து மதுபானங்களுக்கும் நாளை முதல் 20 சதவீதம் விலை உயர்வு ; கலால்துறை

0 4699
புதுச்சேரியில் அனைத்து மதுபானங்களும் விலை உயர்வு

புதுச்சேரியில் அனைத்து மதுபானங்களுக்கும் நாளை முதல் 20 சதவீதம் விலை உயர்வதாக கலால்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள், 96 சாராயக்கடைகள், 75 கள்ளுகடைகள் உள்ளன. மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கொரோனா வரி கடந்த மாதம் நீக்கப்பட்டு விலை குறைந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தயாரிப்பு அல்லது வெளிநாட்டு தயாரிப்பு அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 20 சதவீதம் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments