சிங்கப்பூரில் நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி
சிங்கப்பூரில் உள்ள தெங்கே நீர்த்தேக்கத்தில் (Tengeh Reservoir) மிதக்கும் ஒரு லட்சத்து இருபத்தி ரெண்டாயிரம் சோலார் பேனல்கள் மூலம் மின்சார உற்பத்தி தொடங்க உள்ளது.
சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மின் உற்பத்தி செய்வதற்காக தெங்கே நீர்த்தேக்கத்தின் மேல் 111 ஏக்கர் பரப்பளவில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நிலக்கரிக்கு மாற்றாக சோலார் பேனல்கள் மூலம் இங்கு நடைபெறும் மின் உற்பத்தியால் ஆண்டுக்கு 32 ஆயிரம் டன் கார்பன் வளிமண்டலத்தில் கலப்பது தடுக்கப்படுவதுடன் சிங்கப்பூரில் உள்ள ஐந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்க போதுமான மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments