முகக்கவசம் அணியாமல் கார் மீது அமர்ந்தபடி வலம் வந்த மணப்பெண் மீது வழக்குப்பதிவு

0 3593
முகக்கவசம் அணியாமல் கார் மீது அமர்ந்தபடி வலம் வந்த மணப்பெண் மீது வழக்குப்பதிவு

மராட்டிய மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் ஸ்கார்பியோ கார் பானெட்டில் அமர்ந்தபடி வலம் வந்த மணப்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பூனேவில் உள்ள டைவ் காட் (Dive Ghat) பள்ளத்தாக்கில், கார் மீது அமர்ந்து வெட்டிங் ஃபோட்டோஷூட் (Wedding Photoshoot)நடத்திய மணப்பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

எவ்வித கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் ஃபோட்டோஷூட் ( Photoshoot) நடத்தப்பட்டதால் அடுத்த நாளே மணப்பெண், கார் ஓட்டுநர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் போட்டோஷூட்-க்கு பயன்படுத்தப்பட்ட கேமராவையும் பறிமுதல் செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments