ஜம்மு காஷ்மீரில் உள்ள மலை கிராமத்திற்கு முதன்முறையாக மின்சார இணைப்பு - மக்கள் மகிழ்ச்சி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு முதன்முறையாக மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அக்கிராம மக்கள் மகிழ்ச்சியைடந்துள்ளனர்.
Ramban மாவட்டத்தில் உள்ள Kadala எனும் சிறு கிராமத்தில், 25 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள் மின்வினியோகமின்றி தவித்து வந்த நிலையில் மத்திய அரசின் ”சௌபாக்யா யோஜனா” திட்டத்தின் கீழ், முதன்முறையாக அந்த கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இனி வீட்டில் வெளிச்சத்திற்காக விறகு எரிக்க வேண்டியதில்லை என அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Comments