தவறான தொடர்பில் கர்ப்பம்.. வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் தாய், குழந்தை மரணம்..!
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அருகே இளம்பெண்ணுக்கு வீட்டிலேயே பெற்றோர் பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் உயிரிழந்தனர்.
கொளத்தூர் பகுதியை சேர்ந்த ரேகா, சதிஷ் என்ற இளைஞருடன் நெருக்கமாக இருந்ததால் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. 8 மாதம் கர்ப்பிணியாக இருந்ததால் வேலைக்கு செல்ல விடாமல் பெற்றோர் வீட்டிலேயே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவருக்கு வீட்டிலேயே பெற்றோர் பிரசவம் பார்த்ததில் தாயும், குழந்தையும் இறந்தனர். இறந்த குழந்தையை ரேகாவின் பெற்றோர் ஒரு வாளியில் துணியால் சுற்றி கழிவறையில் மூடி வைத்துள்ளனர்.
ரேகாவிற்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்துவிட்டதாக ரேகாவின் பெற்றோர் மருத்துவர்களிடம் மாற்றி கூறியுள்ளனர்.
சந்தேகமடைந்து பரிசோதித்த மருத்துவர்கள் ரேகாவிற்கு பிரசவம் ஆனதை உறுதிப்படுத்தி காவல் துறையினருக்கு தெரிவித்தனர். இதையடுத்து, ரேகாவுடன் தொடர்பில் இருந்த சதீஷ் மற்றும் ரேகாவின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments