பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் ; அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து, வருகிற 16 ஆம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை - தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
முன்னதாக, திருச்சியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பள்ளிகள் திறப்பு குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் விரைவில் முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.
Comments