தோனியை தொடர்ந்து படமாகும் கங்குலியின் வாழ்க்கை வரலாறு

0 4350

தோனியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்படுகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவருமான கங்குலி, தனது வாழ்க்கை வரலாற்றை படமாக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

200 முதல் 250 கோடி ரூபாய் முதலீட்டில் பெரிய பட்ஜெட் படமாக இந்த பயோபிக் படம் உருவாகிறது எனவும், கங்குலியின் கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதப்பட்டு வரும் நிலையில், படத்தின் இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டவற்றின் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments